ஓய்வூதியம் வாங்க வந்த மூதாட்டி 9 மாதங்களுக்குப் பின் வீடு திரும்பினார் 
இந்தியா

ஓய்வூதியம் வாங்க வந்த மூதாட்டி 9 மாதங்களுக்குப் பின் வீடு திரும்பினார்

பெங்களூருவில் தனது பேரனுடன் வசித்து வந்த 83 வயது மூதாட்டி, தமிழகத்தில் தனது மாத ஓய்வூதியத்தை வாங்க கடந்த மார்ச் மாதம் வீட்டிலிருந்து கிளம்பி, சுமார் 9 மாதங்களுக்குப் பின் தற்போதுதான் தனது வீட்டுக்குத்

ENS


ராய்பூர்: பெங்களூருவில் தனது பேரனுடன் வசித்து வந்த 83 வயது மூதாட்டி, தமிழகத்தில் தனது மாத ஓய்வூதியத்தை வாங்க கடந்த மார்ச் மாதம் வீட்டிலிருந்து கிளம்பி, சுமார் 9 மாதங்களுக்குப் பின் தற்போதுதான் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

மார்ச் மாதம் பெங்களூருவிலிருந்து தமிழகத்துக்கு ரயிலேற வேண்டிய பூபத்தி அம்மாள், தவறுதலாக, விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் ஏறிவிட்டார்.  விசாகப்பட்டினம் சென்று சேர்ந்த பிறகுதான் தவறான ரயிலில் ஏறியதை அறிந்து கொண்டார். அங்கிருந்து மீண்டும் தமிழகத்துக்கு வர முயன்ற அவர், மீண்டும் தவறான ரயிலில் ஏறி சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தரை சென்றடைந்தார்.

மூதாட்டிக்கு வெறும் கன்னட மொழி மட்டுமே தெரிந்திருந்ததால், யாரிடமும் உதவி கேட்கவோ, அவருக்கு பொதுமக்கள் யாரும் உதவி செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கன்னடம் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து, அவரைப் பற்றி தெரிந்து கொண்டோம். ஆனால், விசாகப்பட்டினத்தில் இருந்து எப்படி சட்டீஸ்கர் வந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை என்கிறார் பஸ்தர் மாவட்ட ஆட்சியர் ரஜத் பன்ஸால்.

அவர் மார்ச் மாதம் இங்கு வந்த சேர்ந்து, அவரது விவரங்களை அறிவதற்குள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இங்கு வந்தது முதலே அவர் யாரிடமும் எதுவும் பேசாமல், எப்போதும் அழுதுகொண்டே இருந்தார். இங்கிருந்த சூழ்நிலையை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எப்படியோ அவரது உறவினர்களின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரது பேரன் செந்திலிடம் பேசினோம். அவர் சட்டீஸ்கருக்கு வந்திருப்பது குறித்து அறிந்ததும் செந்தில் கடும் அதிர்ச்சியடைந்தார். பொதுமுடக்கம் காரணமாக முதியோர் இல்லத்தில் இதுநாள்வரை அவரை பத்திரமாக வைத்திருந்தனர்.

அவரது குடும்பத்தினரால், அவரது ரயில் பயணத்துக்கு பணம் அனுப்ப முடியாத நிலையில், மாவட்ட நிர்வாகமே அவரை திரும்ப அனுப்பும் செலவை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். 

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், அந்த மூதாட்டியிடம் மிகவும் சேதமடைந்த ஒரு காகிதத்தில் சில செல்லிடப்பேசி எண்கள் மட்டுமே இருந்தன. அதுமட்டுமே ஒரே துப்பு, அவரது உறவினர்களைக் கண்டுபிடிக்க. அந்த எண்களும் தெளிவாக இல்லாத நிலையில், பல சமூக ஆர்வலர்கள், தங்களது செல்லிடப்பேசிகளில் தொடர்ந்து அந்த எண்களை வேறு வேறு எண்களுடன் சேர்த்துப் போட்டு, அழைப்பை மேற்கொண்டு, அந்த மூதாட்டியின் உறவினரைக் கண்டுபிடித்துக் கொடுத்தனர் என்பதுதான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT