முகப்பு
இந்தியா

கரோனா படுக்கைகள் போதுமான அளவு உள்ளன: தில்லி சுகாதாரத்துறை

தில்லியில் போதுமான அளவிலான கரோனா படுக்கைகள் காலியாகவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
பகிர்:


தில்லியில் போதுமான அளவிலான கரோனா படுக்கைகள் காலியாகவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரித்துள்ளது. தில்லியில் நேற்று (புதன்கிழமை) மட்டும் 2,463 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 50 பேர் உயிரிழந்தனர். கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை மிகக்குறைவாகும். 

மேலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதமும் 13.42 சதவிகிதம் குறைந்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில் தில்லி மெல்ல மெல்ல வெற்றி பெற்று வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது, தில்லியில் மூன்றாவது கரோனா அலை ஓயவில்லை. ஆனால் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும். 

கரோனா தடுப்பு மருந்து சந்தைக்கு வந்தவுடன் முதற்கட்டமாக முதியவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும். பின்னர் போதிய அளவு தடுப்பு மருந்து இருந்தால், தில்லியில் உள்ள அனைத்து  மக்களுக்கும் ஒருவாரத்தில் கரோனா தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் என்று கூறினார்.

கரோனாவால் பாதிக்கப்படாதவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை தேவைப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களுக்காக 2,500 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க 13 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →