முகப்பு
இந்தியா

அரசின் வரைவு அறிக்கைகளை விவசாயிகள் பரிசீலிக்க வேண்டும்: தோமர்

அரசின் வரைவு அறிக்கையை விவசாயிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பியூஷ் கோயலுடன் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
பகிர்:


அரசின் வரைவு அறிக்கையை விவசாயிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகளுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தில்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது அவர் பேசியதாவது, ''வேளாண் சட்டங்களுக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த அரசு முனைப்புடன் உள்ளது. 

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு வேளாண் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து எங்கள் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமான அறிக்கையை வழங்கினோம். அதனை விவசாயிகள் பரிசீலனை செய்ய வேண்டும். 

வரைவு அறிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டுமானால் அதற்கும் அரசு தயாராக உள்ளது. விவசாய சகோதர, சகோதரிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →