முகப்பு
இந்தியா

தில்லி துணை முதல்வர் வீட்டில் பாஜகவினர் தாக்குதல்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
பகிர்:

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

தில்லி அரசிடமிருந்து நிலுவைத் தொகை கோரிய மேயர்களையும், நகராட்சி ஊழியர்களையும் கொலை செய்ய ஆம் ஆத்மி சதி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பாஜகவினர், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டின் அருகே போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சிசோடியாவின் வீட்டைச் சுற்றியுள்ள தடுப்புகளை அகற்றிய பாஜகவினர் சிசோடியாவின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்துள்ளார். மேலும் இச்செயலில் பாஜகவினருக்கு தில்லி காவல்துறை உதவியுள்ளது என்றும் கூறியுள்ளார். 

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தில்லி பாஜக துணைத் தலைவர் அசோக் கோயல், பாஜக மேயர்கள் மற்றும் பிற நிறுவனத் தலைவர்களைக் கொல்லும் சதித்திட்டத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே ஆம் ஆத்மி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →