முகப்பு
இந்தியா

கரோனா: நாட்டில் 97.67லட்சத்தைக் கடந்துள்ளது

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 97,67,372 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3.81 சதவீதமாக உள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 97,67,372 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3.81 சதவீதமாக உள்ளது. 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 31,522 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  97,67,372 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், கரோனா தொற்றுக்கு மேலும் 412 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,41,772-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் மேலும் 37,725 பேர் மீண்டுள்ளனர். இதனால் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 92,53,306 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது, மொத்த பாதிப்பில் 94.74 சதவீதமாகும்.

நாட்டில் இப்போது 3,72,293 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 3.81 சதவீதமாகும். புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும், சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 9-ஆம் தேதி வரை 15,07,59,726 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 9,22,959 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.