முகப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மும்பையில் பாஜகவினர் போராட்டம்
இந்தியா

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துக: மும்பையில் பாஜக பேரணி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மும்பையில் போராட்டம் நடத்தி வரும் பாஜகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மும்பையில் பாஜகவினர் போராட்டம்
பகிர்:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மும்பையில் போராட்டம் நடத்தி வரும் பாஜகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேற்கு வங்கத்தில் 2021 ஏப்ரல் - மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை அம்மாநிலத்திற்குச் சென்றார். வியாழக்கிழமை அவர் திரும்பும்போது அவரது வாகனம் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இந்தத் தாக்குதலில், குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்திய காரில் சென்ற ஜெ.பி.நட்டா பாதிப்பு இன்றி தப்பியபோதும், அவருடன் சென்ற பிற பாஜக தலைவா்களின் கார் கண்ணாடிகள் உடைந்ததோடு, சிலர் காயமும் அடைந்தனர்.

மேற்கு வங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெ.பி.நட்டாவின் கார் மீதான தாக்குதலுக்குக் காரணம் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி என பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மும்பையில் பாஜகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். 

மேற்கு வங்க முதல்வரின் உருவ பொம்மையை எரித்தும், அவரது போஸ்டர்களில் கறுப்பு மை தேய்த்ததும், அவருக்கு எதிராக கோஷமிட்டும் சென்றனர். 

மேற்குவங்கத்தில் ஒரு கட்சியின் தலைவருக்கே பாதுகாபில்லாத நிலையில் ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரிடம், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக பாஜக எம்எல்ஏவும் செய்தித் தொடர்பாளருமான ராம் கதம் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →