முகப்பு
இந்தியா

'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' - ராகுல் காந்தி ட்வீட்

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்று பாரதியாரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
ராகுல் காந்தி
பகிர்:

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்று பாரதியாரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்"

என்ற பாரதியின் வரிகளை மேற்கோளிட்டுக் காட்டி, 'வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்று சிறந்த தமிழ்க் கவிஞர் பாரதியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →