ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் தவறி விழுந்து ராணுவ வீரர் பலி
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ராணுவ வீரரான சுரேஷ் குர்கே என்பவர் ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நவ்ஷேரா பகுதியின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவரை மருத்துவமனை கொண்டு சென்றதாகவும், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும், ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.