முகப்பு
சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
இந்தியா

விவசாய சங்கத் தலைவர்கள் நாளை உண்ணாவிரதம்

​புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயத் தலைவர் குர்னம் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா

விவசாய சங்கத் தலைவர்கள் நாளை உண்ணாவிரதம்

​புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயத் தலைவர் குர்னம் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
பகிர்:


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயத் தலைவர் குர்னம் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த குர்னம் சிங் தெரிவித்ததாவது:

"அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். நாளை முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது. மற்றபடி போராட்டம் வழக்கம்போல் நடைபெறும்.

சில குழுக்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அவர்கள் அரசின் கைப்பாவையாக இருந்து எங்களது போராட்டத்தை நாசப்படுத்த சதி செய்கின்றனர். நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை அகற்ற அரசு சதித் திட்டம் தீட்டி வருகிறது."

மற்றொரு விவசாயத் தலைவர் ஷிவ் குமார் தெரிவித்ததாவது:

"விவசாயிகள் தில்லி வருவதை அரசாங்கத்தின் அமைப்புகள் தடுக்கின்றன. ஆனால், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். 3 சட்டங்களும் திரும்பப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ள அனைத்து விவசாயத் தலைவர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம்."

மேலும் ஒரு விவசாயத் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்ததாவது: 

"பேச்சுவார்த்தை நடத்த மற்றொரு முன்மொழிவை அரசு வழங்கினால், எங்களது குழு அதுகுறித்து முடிவெடுக்கும். போராட்டத்தின்போது அமைதி காக்க அனைவரையும் வலியுறுத்துகிறோம்."

முழு கட்டுரையைப் படிக்க →