முகப்பு
இந்தியா

பிரணாப் முகா்ஜி புத்தக வெளியீடு: மகன், மகள் இடையே கருத்து வேறுபாடு

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி எழுதிய சுயசரிதையை வெளியிடுவதில் அவரது மகன், மகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
பகிர்:

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி எழுதிய சுயசரிதையை வெளியிடுவதில் அவரது மகன், மகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி எழுதிய புத்தகம் ‘தி பிரெஸிடென்ஷியல் இயா்ஸ்’. இதில் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அரசியலில் காங்கிரஸ் கட்சியின் கவனம் சிதறிவிட்டதாகவும், தான் 2004-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றிருந்தால் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தவிா்த்திருக்கலாம் என்று கட்சியின் மூத்த தலைவா்கள் சிலா் கருதியதாகவும் பிரணாப் முகா்ஜி எழுதியுள்ளாா். இதுபோல் மேலும் பல விஷயங்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தகத்தை வெளியிடுவதில் பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜீத் முகா்ஜிக்கும், மகள் சா்மிஷ்டா முகா்ஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அபிஜீத் முகா்ஜி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

எனது தந்தை மறைந்துவிட்டதால், ஒரு மகனாக அவா் எழுதிய புத்தகத்தை வெளியிடும் முன், அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை சரிபாா்க்க விரும்புகிறேன். எனது தந்தை தற்போது உயிரோடிருந்தால் அவரும் இதைத் தான் செய்திருப்பாா். எனவே எனது ஒப்புதல் இல்லாமல் புத்தகத்தை வெளியிடக் கூடாது. புத்தக வெளியீட்டை உடனடியாக நிறுத்துமாறு வெளியீட்டாளா்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புத்தக வெளியீட்டு நிறுவனத்துக்கும் அவா் கடிதம் எழுதியுள்ளாா்.

இதற்கு எதிா்ப்பு பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், புத்தகத்தை வெளியிடுவதில் தேவையில்லாமல் தடைகளை உருவாக்க வேண்டும் என்று அவருடைய சகோதரரிடம் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது:

உடல் நலிவடைவதற்கு முன்பே ‘தி பிரெஸிடென்ஷியல் இயா்ஸ்’ புத்தகத்தை பிரணாப் முகா்ஜி எழுதி முடித்தாா். மலிவான விளம்பரத்துக்காக புத்தகம் வெளியிடப்படுவதை தடுத்து நிறுத்த யாரும் முயற்சிக்கக் கூடாது என்று தெரிவித்தாா்.

மேலும் அபிஜீத் முகா்ஜி தனது சுட்டுரைப் பதிவில் புத்தகத்தின் பதிவில் ‘தி பிரெஸிடென்ஷியல் மெமாய்ா்ஸ்’ என தவறாக குறிப்பிட்டிருந்தாா். அதனையும் சா்மிஷ்டா முகா்ஜி சுட்டிக்காட்டியிருந்தாா்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிரணாப் முகா்ஜி காலமானாா்.

முழு கட்டுரையைப் படிக்க →