இந்தியா

18 வயது ஆவதற்கு முன்பே திருமணமான பெண்கள்: தரவுகள் கூறும் உண்மை!

​தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் சமீபத்திய தரவுகளின்படி பிகார், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் 40 சதவிகித பெண்கள் 18 வயது ஆவதற்கு முன்பே  திருமணமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

DIN

​தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் சமீபத்திய தரவுகளின்படி பிகார், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் 40 சதவிகித பெண்கள் 18 வயது ஆவதற்கு முன்பே  திருமணமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

15-19 வயதுக்கிடையிலான பெண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு:
மாநிலம்கணக்கெடுப்பின்போது தாயாக அல்லது கர்ப்பிணியாக உள்ளவர்கள் விகிதம்
ஆந்திரப் பிரதேசம்12.6 சதவிகிதம்
அசாம்11.7 சதவிகிதம்
பிகார்11 சதவிகிதம்
திரிபுரா21.9 சதவிகிதம்
மேற்கு வங்கம்16.4 சதவிகிதம்
20-24 வயதுக்கிடையிலான பெண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுக்கப்பு:
மாநிலம்18 வயது ஆவதற்கு முன்பே திருமணமான பெண்கள் விகிதம்
பிகார்40.8 சதவிகிதம்
திரிபுரா40.1 சதவிகிதம்
மேற்கு வங்கம்41.6 சதவிகிதம்
அசாம்31.8 சதவிகிதம்
ஆந்திரப் பிரதேசம் 29.3 சதவிகிதம்
குஜராத்21.8 சதவிகிதம் 
கர்நாடகம்21.3 சதவிகிதம்
மகாராஷ்டிரம் 21.9 சதவிகிதம்
தெலங்கானா23.5 சதவிகிதம்
25 -29 வயதுக்கிடையிலான ஆண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு:
மாநிலம்21 வயது ஆவதற்கு முன்பே
திருமணமான பெண்கள் விகிதம்
அசாம்21.8 சதவிகிதம்
பிகார்30.5 சதவிகிதம்
குஜராத்27.7 சதவிகிதம்
திரிபுரா20.4 சதவிகிதம்
மேற்கு வங்கம்20 சதவிகிதம்
லடாக்20.2 சதவிகிதம்

அசாம், பிகார், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், தெலங்கானா, மேற்கு வங்கம், மிசோரம், கேரளம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தக் கணக்கெடுப்பு முதற்கட்டமாக நடத்தப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக மீதமுள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளது.

பெண்களின் திருமண வயது -18, ஆண்களின் திருமண வயது -21. இப்படி இருக்கையில் இந்த தரவுகள் இந்தியாவின் நிலையை வெளிப்படுத்துகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT