இமாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவு
இமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது.
இமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு மண்டிக்கு சுமார் 13 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 2.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 76.84 ஆழத்தில் பதிவாகியுள்ளதாக நிலஅதிர்வு மையம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.