முகப்பு
இந்தியா

மதுபானம் தர மறுத்ததால் மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள்!

திருமணம் நடந்த சில மணி நேரங்களில் மணமகன் அவரது சகோதரர்களால் கத்தியால் குத்தப்படட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் மணமகன் அவரது சகோதரர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் பாலிமுகிம் புர் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு 28 வயதான பப்லு தனது திருமணத்திற்குப் பிறகு நண்பர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார். 

அப்போது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்றக் கேட்டுள்ளனர். ஆனால் பப்லு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நண்பர்கள் பப்லுவை கத்தியால் குத்தியுள்ளனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதில் குற்றம் சாட்டப்பட்ட ராம்கிலாடி என்பவரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். மேலும் ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →