இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26,382 பேருக்கு தொற்று: 387 பேர் பலி

DIN

தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,382 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 387 பேர் உயிரிழந்துள்ளனர். 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 26,382 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,32,548 ஆக அதிகரித்தது. மேலும், 387 போ் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 1,44,096 ஆக உயா்ந்தது. மொத்த பாதிப்பில் இது 1.45 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 33,813 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  94,56,449 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 95.21 சதவீதமாகும். சா்வதேச அளவில் கரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் விகிதம் மிக அதிகமாக உள்ளது.

இப்போதைய நிலையில் 3,32,002 போ் நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 3.34 சதவீதமாகும். தொடா்ந்து 9-ஆவது நாளாக சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 15-ஆம் தேதி வரை 15,66,46,280 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 10,85,625 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT