என்னை விலைக்கு வாங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை: ஒவைசி
தன்னை விலைக்கு வாங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு ஒவைசி இன்று (புதன்கிழமை) பதிலளித்துள்ளார்.
தன்னை விலைக்கு வாங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு ஒவைசி இன்று (புதன்கிழமை) பதிலளித்தார்.
இதுபற்றி ஒவைசி தெரிவித்ததாவது:
"அசாதுதீன் ஒவைசியை விலைக்கு வாங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவரது கட்சியினர் பாஜகவுக்கு செல்கின்றனர். அதுகுறித்துதான் அவர் கவலைப்பட வேண்டும். பிகார் வாக்காளர்களையும், எங்களுக்கு வாக்களித்தவர்களையும் மம்தா அவமதித்துள்ளார்."
முன்னதாக மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை பேசியது:
"சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிக்க, ஹைதராபாத்திலிருந்து ஒரு கட்சிக்கு காசு கொடுத்து வரவழைக்கிறது பாஜக. அவர்கள் வாக்குகளைப் பிரிக்கின்றனர். பிகார் தேர்தலில் இது உறுதியாகிவிட்டது."