பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை நிறுத்துக: மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை
போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்தியாபிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை நிறுத்துக: மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை
போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
புது தில்லி: போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தில்லி எல்லையில் 21வது நாளாக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிற விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, புதிய வேளாண் சட்டங்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சன்யுக்த் கிசான் மோர்சா என்ற விவசாய அமைப்பு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், மத்திய அரசு, விவசாயிகளின் போராட்டத்தை திசைதிருப்பும் நோக்கத்தில், பிற விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறுவதை நிறுத்த வேண்டும்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்வதாகக் கூறி மத்திய அரசின் அனைத்து பரிந்துரைகளும் நிராகரித்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதோடு, ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், எங்களது நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமரை உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பாரதிய கிஸான் யூனியன் (கிஸான்) சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சந்தித்து புதிய வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவை தொடா்பாக சில பரிந்துரைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.