முகப்பு
இந்தியா

மின்சாரத் துறையினரும் கரோனா முன்களப் பணியாளர்களே: சுகாதாரத்துறை

மின்சாரத் துறை மற்றும் குடிநீர் வாரியத்தினரும் கூட கரோனா முன்களப் பணியாளர்கள் தான் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
பகிர்:


மின்சாரத் துறை மற்றும் குடிநீர் வாரியத்தினரும் கூட கரோனா முன்களப் பணியாளர்கள் தான் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் மின்சாரத் துறையினருக்கும், குடிநீர் வாரியத்தினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் மூன்றவாது முறையாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அரசு சார்பில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கரோனா தடுப்பு மருந்து சந்தைக்கு வந்தால், கரோனா முன்களப் பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் முதலில் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த பட்டியலில் மின்சாரத் துறையினரையும், குடிநீர் வாரியத்தினரையும் தில்லி சுகாதாரத்துறை முன்களப் பணியாளர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

இது குறித்து பேசிய அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், கரோனா பொதுமுடக்கத்திலும் மின்சாரத் துறையினரும், குடிநீர் வாரியத்தினரும் இரவு பகலாக பணியாற்றினர்.

கரோனா தடுப்பு மருந்திற்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) அளித்த அறிக்கையில், மின்சாரத்துறை மற்றும் குடிநீர் வாரியத்தினருக்கும் சேர்த்து மருந்து கோரப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கும் முதற்கட்டமாகவே கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →