இந்தியா

திருமண கொண்டாட்டத்துக்கு மது இல்லையா?: ஆத்திரத்தில் புதுமாப்பிள்ளை படுகொலை

​உத்தரப் பிரதேசத்தில் திருமண கொண்டாட்டத்துக்கு கூடுதல் மது கொடுக்கவில்லை என்பதால் நண்பர்களாலே புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

DIN


உத்தரப் பிரதேசத்தில் திருமண கொண்டாட்டத்துக்கு கூடுதல் மது கொடுக்கவில்லை என்பதால் நண்பர்களாலே புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி  காவல் துறையினர் தெரிவித்தது:

"இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்துள்ளது. திருமணம் முடிந்தவுடன் பப்லு (28) தனது நண்பர்களைச் சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவரது நண்பர்கள் ஏற்கெனவே அதிகளவில் மது அருந்தி போதையில் இருந்துள்ளனர். மேற்கொண்டு மது வாங்கித் தருமாறு பப்லுவிடம் கேட்டுள்ளனர். ஆனால், பப்லு தன்னால் இதற்கு ஏற்பாடு செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு நண்பர் ஆத்திரத்தில் பப்லுவைக் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து, பப்லு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் பலியாகிவிட்டார்."

இதுபற்றி வட்டார அலுவலர் நரேஷ் சிங் புதன்கிழமை தெரிவித்தது:

"இந்த வழக்கு தொடர்பாக முக்கியக் குற்றவாளி ராம்கிலாடி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் போலியோ விழிப்புணா்வு பேரணி

மகளிா் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆட்டோ: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தனியாா் பேருந்து மோதி பெட்ரோல் பம்ப் மேலாளா் பலி

விதிமீறல்: 16 வாகனங்களுக்கு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT