முகப்பு
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
இந்தியா

விவசாயிகளுடன் அமர்ந்து பேசி பிரச்னையைத் தீர்க்கவே அரசு விரும்புகிறது: மத்திய அமைச்சர்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவே மத்திய அரசு விரும்புவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவே மத்திய அரசு விரும்புவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், சிங்கு, திக்ரி உள்ளிட்ட தில்லியின் எல்லைப் பகுதிகளில் 3 வாரங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காணொலி வாயிலாக விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

போராட்டம் செய்யும் விவசாயிகள் பலருக்கு தாங்கள் எதை எதிர்த்து போராடுகிறோம் என்றே தெரியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை, ரகசியமாக விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கக்கூடாது, விவசாய மண்டிகள் இருக்க வேண்டும் என விவசாயிகளின் மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு கூறுகிறது. எனினும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாங்கள் விவசாயிகளுடன் அமர்ந்து பேசி அவர்களின் பிரச்னையைத் தீர்க்க தயாராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார். 

மேலும் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கரோனாவிலிருந்து மீண்டு நாம் பழைய நிலைக்குத் திரும்புவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →