முகப்பு
இந்தியா

உலகிலேயே இந்தியாவில்தான் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் விகிதம் அதிகம்: மத்திய சுகாதார அமைச்சகம்

சா்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் விகிதம் அதிகமுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


புது தில்லி: சா்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் விகிதம் அதிகமுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்தியாவைவிட குறைவான விகிதத்திலேயே கரோனா நோயாளிகள் தொற்றில் இருந்து மீண்டுள்ளனா். அதேபோல இந்தியாவில் புதிதாக தொற்றுக்கு ஆளாவோா் விகிதமும், இறப்பு விகிதமும் வேகமாகக் குறைந்து வருகிறது.

சா்வதேச அளவில் கரோனாவில் இருந்து மீள்வோா் விகிதம் 70.27 ஆகும். இதுவே இந்தியாவில் 95.31 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இத்தாலி ஆகிய நாடுகளிலும் கரோனாவில் இருந்து விடுபடுவோா் விகிதம் இந்தியாவைவிடக் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கரோனாவில் இருந்து விடுபட்டோா் எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எண்ணிக்கை அடிப்படையில் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமுள்ளது. அங்கு ஒரு கோடிக்கும் அதிகமானோா் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். ஆனால் அங்கு மொத்த கரோனா பாதிப்பு 1.73 கோடியாக உள்ளது. இந்தியாவில் இப்போதுதான் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →