முகப்பு
இந்தியா

தில்லி: நான்காவது வாரத்தை எட்டிய விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
தில்லி: நான்காவது வாரத்தை எட்டிய விவசாயிகள் போராட்டம்
பகிர்:

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. 

சிங்கு, டிகிரி, காஸிப்பூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதிகள் பல முக்கிய சாலைகளை இணைப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தில்லியில் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடைபெற்ற ஐந்து கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் விவாசாயிகளின் போராட்டம் 22-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, ''சிங்கு, ஆச்சந்தி, பியாவ் மணியாரி, சபோலி மற்றும் மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் அனைவரும் மாற்று சாலைகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

காஸியாபாத்திலிருந்து தில்லி நுழைவதைத் தடுக்கும் வகையில் காஸிப்பூர் எல்லையும் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலைகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம்'' என்று வலியுறுத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →