இந்தியா

‘பப்ஜி விளையாட்டுக்கு அனுமதியில்லை’: மத்திய அரசு விளக்கம்

DIN

பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை மீண்டும் அனுமதிப்பதற்கான ஒப்புதல் எதுவும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேச பாதுகாப்பு மற்றும் தனி நபா் தகவல்கள் திருடப்படும் அச்சம் ஆகியவை காரணமாக பப்ஜி விளையாட்டு உள்பட சீனா தொடா்புடைய 118 செல்லிடபேசி செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த செப்டம்பா் மாதம் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியப் பயனர்களுக்காக பப்ஜி மொபைல் நிறுவனம் பப்ஜி மொபைல் இந்தியா என்ற புதிய விளையாட்டை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட வினாவிற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், “இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டை அனுமதிப்பதற்கான ஒப்புதல் ஏதும் வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT