கர்நாடகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா
கர்நாடகத்தில் கடந்த மூன்று நாள்களாக ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,222 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த மூன்று நாள்களாக ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,222 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இது தொடர்காக கர்நாடக சுகாதாரத்துறை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,222 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,07,123-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 15,380 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,79,735-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,989-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.