முகப்பு
சிங்கு எல்லையில் நீண்ட கூடாரங்களைப் போடும் விவசாயிகள்
இந்தியா

சிங்கு எல்லையில் தங்குவதற்கு நீண்ட கூடாரங்களைப் போடும் விவசாயிகள்

தில்லியின் எல்லைப் பகுதியான சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மேலும் ஏராளமான நீர் புகாத கூடாரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா

சிங்கு எல்லையில் தங்குவதற்கு நீண்ட கூடாரங்களைப் போடும் விவசாயிகள்

தில்லியின் எல்லைப் பகுதியான சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மேலும் ஏராளமான நீர் புகாத கூடாரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
சிங்கு எல்லையில் நீண்ட கூடாரங்களைப் போடும் விவசாயிகள்
பகிர்:


புது தில்லி: தில்லியின் எல்லைப் பகுதியான சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மேலும் ஏராளமான நீர் புகாத கூடாரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து 23-ஆவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின், தங்களது போராட்டம் மேலும் பல நாள்கள் நீடிக்கும் என்பதை உறுதி செய்யும் வகையிலும், தற்போது நிலவும் மிக மோசமான குளிர்நிலையை எதிர்கொள்ளவும் இந்த கூடாரங்களை அமைத்து வருகிறார்கள்.

இந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து நாங்கள் நடத்தி வரும் போராட்டம் மேலும் நீடித்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறோம். இந்த சட்டங்களுக்கு எதிரான எங்களது போராட்டத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தயால் சிங் தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லியில் தற்போது வெப்பநிலை மிகவும் குறைந்து வரும் நிலையில், போராட்டத்தில் விவசாயிகளுடன் பெண்கள், குழந்தைகள், முதியவர்களும் இணைந்துள்ளதால் அவர்களும் கடும் துன்பத்துக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, விவசாயிகளை குளிரிலிருந்து காக்கும் வகையில், மீக நீண்ட, நீர் புகாத கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த போராட்டம் வெகு நாள்களுக்கு நீடிக்கும், எங்களுடன் பெண்கள் குந்தைகள் இருக்கிறார்கள். எனவேதான் நீண்ட கூடாரங்களை அமைத்து வருகிறோம் என்கிறார் மற்றொரு விவசாயி.

முழு கட்டுரையைப் படிக்க →