முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் அமித் ஷா: பிற்பகலில் மக்களை சந்திக்கத் திட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள்கள் பயணமாக மேற்குவங்கத்திற்கு சென்றுள்ளார். கொல்கத்தா சென்ற அவர், ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள்கள் பயணமாக மேற்குவங்கத்திற்கு சென்றுள்ளார். கொல்கத்தா சென்ற அவர், ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார்.

மேற்குவங்க மாநிலத்தில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜகவும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென திரிணமூல் காங்கிரஸும் போட்டிகளத்தில் முயன்று வருகின்றன.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸிலிருந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்து பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளிவருவது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், மேற்குவங்க மக்களை சந்தித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டாவது முறையாக மேற்குவங்கம் சென்றுள்ளார்.

முதலில் கொல்கத்தா சென்ற அவர், ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மேதினிப்பூர் பகுதியில் பேரணியில் ஈடுபட்டு மக்களை சந்திக்கவுள்ளார்.

முன்னதாக, கடந்த 10 ஆம் தேதி மேற்குவங்கம் வந்த பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அமித் ஷாவின் வருகை அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →