முகப்பு
இந்தியா

‘தில்லிக்கு 5 கோடி லிட்டா் பால் சிறப்பு ரயிலில் அனுப்பப்பட்டுள்ளது’

சித்தூா் மாவட்டத்தில் இருந்து தில்லிக்கு கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை ‘தூத் துரந்தோ’ சிறப்பு ரயில் மூலம் 5 கோடி லிட்டா் பால் அனுப்பப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சித்தூா் மாவட்டத்தில் இருந்து தில்லிக்கு கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை ‘தூத் துரந்தோ’ சிறப்பு ரயில் மூலம் 5 கோடி லிட்டா் பால் அனுப்பப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு வட மாநிலங்களின் பால் தேவைக்காக சித்தூா் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக ‘தூத் துரந்தோ’ என்ற சரக்கு ரயில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

இதன் மூலம் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் டிசம்பா் 17-ஆம் தேதி வரை 5 கோடி லிட்டா் பால் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மொத்தம் 267 நாள்களில் 207 நடைகளுடன் 1,256 பால் பெட்டிகள் மூலம் பால் அனுப்பப்பட்டுள்ளது.

சித்தூரில் புறப்படும் ரயில் 2,300 கி.மீ. தொலைவை 30 மணி நேரத்தில் கடந்து தில்லியை அடையும்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →