கேரளத்தில் இன்று மேலும் 5,711 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று மேலும் 5,711 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று மேலும் 5,711 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணநேரத்தில் 53,858 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் புதிதாக 5,711 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. தற்போது 61,694 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவிலிருந்து இன்று 4,471 பேர் குணமடைந்தனர். இதுவரை 6,41,285 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மேலும் 30 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,816ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 2,87,099 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
இவர்களில், 2,73,398 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் உள்ளனர். 13,701 பேர் மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 1,393 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 2 புதிய இடங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2 இடங்கள்ல் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டது. கேரளாவில் தற்போது 458 ஹாட் ஸ்பாட்கள் உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.