முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 1.31 கோடியைத் தாண்டியது 

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1.31 கோடியைத் தாண்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1.31 கோடியைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 26,624 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,00,31,223-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 341 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,45,477-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் இருந்து மேலும் 29,690 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 95,80,402-ஆக அதிகரித்தது. 

நாட்டில் இப்போது 3,05,344  போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

புதிதாக ஏற்பட்ட 366 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 75 பேரும், அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 42 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த தொற்று பாதிப்புகளில், கேரளம்  மற்றும் மகாராஷ்டிரத்தில் மட்டும் 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20,000 க்கும் குறைவான தொற்று பாதிப்புகளே உள்ளன.

தொற்று பாதிப்புகள் அதிக உள்ள பிற மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் (19,065), உத்தரப்பிரதேசம் (17,955), மற்றும் சத்தீஸ்கர் (17,488) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, டிசம்பா் 19-ஆம் தேதி வரை 16,11,98,195 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 11,07,681 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் வூஹானில் மருத்துவம் பயின்று வந்த கேரள மாணவிதான் இந்தியாவில் முதல் கரோனா நோய்த் தொற்று உள்ள நபா் எனத் தெரிய வந்தது. வறட்டு இருமல், தொண்டை வறட்சியுடன் திருச்சூா் அரசு மருத்துவமனையில் இவ்வாண்டு ஜனவரி 27-இல் அவா் சிகிச்சை பெற வந்தாா். தனிமைப்படுத்தப்பட்டு அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரி, புணேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. ஜன.30 கிடைத்த ஆய்வக முடிவுகள் அந்த மாணவிக்கு கரோனா தொற்று உள்ளதை உறுதிப்படுத்தியது.

கா்நாடக மாநிலம் கலபுா்கியைச் சோ்ந்த 78 வயதானவா்தான் இந்தியாவில் கரோனாவுக்கு பலியான முதல் நபா். சவூதியிலிருந்து திரும்பிய அவா் மாா்ச் மாதம் 11-ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக காலமானாா். தொற்று காரணமாக அவா் இறந்த தகவலை மாநில சுகாதார அமைச்சா் மாா்ச் 13-ஆம் தேதி வெளியிட்டாா்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 20 லட்சம் போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் அதிகரித்தது. அதன்பிறகு, ஒரு கோடியைத் தொடுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.