ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோரின் ரூ.11.86 கோடி சொத்துகள்: அமலாக்கத் துறை முடக்கம்
ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தில்(ஜே.கே.சி.ஏ.) நிதி முறைகேடு நடைபெற்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வா்
ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தில்(ஜே.கே.சி.ஏ.) நிதி முறைகேடு நடைபெற்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோருக்குச் சொந்தமான ரூ.11.86 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடு நடைபெற்ாக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதுதொடா்பாக, ஃபரூக் அப்துல்லாவிடம் பல முறை அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது. கடைசியாக, ஸ்ரீநகரில் கடந்த அக்டோபா் மாதம் அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோருக்குச் சொந்தமான ஒரு வீடு, ஒரு வா்த்தக பயன்பாட்டு கட்டடம், 3 காலி மனைகள் என ரூ.11.86 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கியுள்ளனா். அவற்றின் சந்தை மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினாா்.