முகப்பு
இந்தியா

ஹைதராபாத்தில் 100-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு 

கிரேட்டர் ஹைதராபாத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முதல் முறையாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

Updated On : 21 டிசம்பர், 2020 at 11:48 AM
Hyd's daily Covid count drops below 100
பகிர்:

கிரேட்டர் ஹைதராபாத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முதல் முறையாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 86 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.

கடந்த ஜூன் தொடக்கத்தில் தெலங்கானாவில் தொற்று நோய் அதிகளவில் பரவி வந்தது. ஒரு கட்டத்தில் தினசரி எண்ணிக்கை 900ஐத் தாண்டியது. இருப்பினும், செப்டம்பர் மாதம் முதல் தொற்று பரவல் குறைந்து வருகின்றன.

Advertisement

இதற்கிடையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 316 பேருக்கு புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,81,730 ஆக உள்ளது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,73,625 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,515 ஆகவும் உள்ளது. 

மாநிலத்தில் தற்போது 6,590 மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவற்றில் 4,467 வீடு அல்லது தனியார் நிறுவன தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.