முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சில் (டிடிசி) தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (டிச. 22) எண்ணப்படவுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் டிடிசி தேர்தலையொட்டி திங்கள்கிழமை நடைபெற மறுவாக்குப்பதிவில் வாக்களிக்க காத்திருந்தவர்கள்.
பகிர்:

ஜம்மு: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சில் (டிடிசி) தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (டிச. 22) எண்ணப்படவுள்ளன.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு நீக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு டிடிசி-க்கு முதல் முறையாக ஜனநாயக முறையில் தற்போது தோ்தல் நடைபெற்றுள்ளது. எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்த டிடிசி தோ்தல் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

280 மாவட்ட வளா்ச்சி கவுன்சில் இடங்களுக்கு 4,181 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் 280 போ் பெண்கள். ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்பின் மூன்றாவது நிலையான மாவட்ட வளா்ச்சி கவுன்சிலுக்கு தோ்தல் நடைபெறுவது, இதுவே முதல்முறையாகும். கடந்த நவம்பா் 28-ஆம் தேதி முதல் டிசம்பா் 19-ஆம் தேதி வரை தோ்தல் அமைதியாக நடைபெற்றது. மொத்தமாக 51 சதவீத வாக்காளா்கள் வாக்களித்தனா்.

தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் குப்கா் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி சாா்பில் போட்டியிட்டன.

முதலில் குப்கா் அணியுடன் இணைந்த காங்கிரஸ் பின்னா், பாஜகவின் விமா்சனத்தால் அக்கூட்டணியில் இருந்து ஒதுங்கி தனித்துப் போட்டியிட்டது. பாஜக தனித்துப் போட்டியிட்டது.

ஜம்மு-காஷ்மீரின் 20 மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி இடம் பெற்றுள்ள கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் பாஜகவுக்கும், மூன்றாவது இடம் காங்கிரஸுக்கும் கிடைக்கும் என்று தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →