வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் விவசாயிகளைச் சந்திக்க போராடும் விவசாயிகள் முடிவு
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளைச் சந்திக்க முடிவெடுத்துள்ளதாக பாரதிய விவசாய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவேளாண் சட்டங்களை ஆதரிக்கும் விவசாயிகளைச் சந்திக்க போராடும் விவசாயிகள் முடிவு
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளைச் சந்திக்க முடிவெடுத்துள்ளதாக பாரதிய விவசாய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் திங்கள்கிழமை தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளைச் சந்திக்க முடிவெடுத்துள்ளதாக பாரதிய விவசாய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் தெரிவித்தது:
"மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளைச் சந்திக்கவுள்ளோம். இந்த சட்டங்கள் மூலம் அவர்கள் எவ்வாறு பலனடைகிறார்கள் என்பது பற்றியும், பயிர்களை விற்க அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்தும் தெரிந்துகொள்வோம்."
இதையடுத்து, பாரதிய விவசாய சங்கத்தின் செயலாளர் பல்வாந்த் சிங் தெரிவித்தது:
"ஒருவர் மாற்றி ஒருவர் என ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் 11 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வார்கள். இதற்கான விவசாயிகள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுவிட்டது."
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26 முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையிலான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை. இதற்கிடையே பல்வேறு விவசாயக் குழுவினர் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரைச் சந்தித்து சட்டங்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.