இந்தியா

இந்தியா - பிரிட்டன் இடையே டிச.31 வரை விமான போக்குவரத்துக்குத் தடை

DIN


புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையே டிசம்பர் 31-ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு டிசம்பர் 22-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி முதல் அமலுக்கு வருகிறது. டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளும் பிரிட்டனிலிருந்து விமானச் சேவைக்குத் தடை விதித்திருக்கும் நிலையில், இந்தியா - பிரிட்டன் இடையே நாளை முதல் தற்காலிகமாக விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொளள்ப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உருமாறிய அதி தீவிர கரோனா தொற்று 70 சதவீதம் அதி வேகமாகப் பரவி வருவதால், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருக்கும் நிலையில், இந்தியாவும் தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் கரோனா தீவிரம் அதிகரித்திருக்கும் நிலையில், விமானப் போக்குவரத்து மூலம் தில்லியிலும் தாக்கம் அதிகரிக்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விடுத்த வேண்டுகோளை அடுத்து, விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT