முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 6,049 பேருக்கு கரோனா

​கேரளத்தில் புதிதாக 6,049 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 6,049 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"மாநிலத்தில் புதிதாக 6,049 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 108 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 5,306 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 575 பேருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

மேலும் 27 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,870 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 64,829 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

மேலும் 5,057 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 6,50,836 பேர் குணமடைந்துள்ளனர். 61,468 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."

முழு கட்டுரையைப் படிக்க →