முகப்பு
இந்தியா

காஷ்மீரில் தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயம்

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயமாகியுள்ளார்.

Updated On : 23 டிசம்பர், 2020 at 10:56 AM
காஷ்மீரில் தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயம்
பகிர்:


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயமாகியுள்ளார். 

சிறப்பு காவல் அதிகாரி ஸாகிர் ஹுசைன் மாலிக், குல்காம் மாவட்டம் ஃபிரிசல் பகுதியில் தேர்தல் பணிக்குச் சென்ற நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் அவர்து ஏகே ரக துப்பாக்கியுடன் மாயமாகியிருப்பதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன காவல்துறை அதிகாரி மாலிக்கைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.