அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவு
அந்தமான் நிகோபர் தீவுகளில் சனிக்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிகோபர் தீவுகளில் சனிக்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், டிக்லிபூருக்கு வடக்கே 320 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7:49 மணிக்கு 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பொருள்சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.