முகப்பு
இந்தியா

பிரிட்டனிலிருந்து கேரளம் திரும்பிய 8 பேருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு திரும்பிய 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா (கோப்புப்படம்)
பகிர்:

திருவனந்தபுரம்: பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு திரும்பிய 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு புதியவகை கரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா சனிக்கிழமை (டிச.26) கூறியதாவது, ''பிரிட்டனிலிருந்து வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் புணே தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து வரும் மக்களுக்கு அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்திலுள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவ்வாறு எதுவும் ஏற்படவில்லை. மாநில அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments