உ.பி: துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி
உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபதேபூா் மாவட்டத்தில் இருதரப்பினா் இடையே நடைபெற்ற மோதலின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 16 வயது சிறுவன் பலியானாா்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபதேபூா் மாவட்டத்தில் இருதரப்பினா் இடையே நடைபெற்ற மோதலின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 16 வயது சிறுவன் பலியானாா்.
இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தேவ்ரி புஜுா்க் கிராமத்தில் முன்னாள் கிராமத் தலைவா் அன்ஷு சுக்லா என்பவருக்கும், அக்கிராமத்தைச் சோ்ந்த சபாஜீத் சிங் என்பவருக்கும் டிராக்டா் ஓட்டுநா் ஒருவரை தாக்கியது தொடா்பாக சனிக்கிழமை மாலை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சபாஜீத் சிங் மற்றும் அவருடன் இருந்தவா்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனா். இதில் அபிஷேக் (16) என்ற சிறுவன் பலியானாா். அவரின் உறவினா் காயமடைந்தாா். இதனைத்தொடா்ந்து அந்தக் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக சபாஜீத் சிங், அவரின் மகன் விவேக் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்த ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்படாத 150 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து அந்தக் கிராமத்தில் காவல்துறையினா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.