இந்தியா

ஜன. 31 வரை கரோனா கட்டுப்பாடுகள் தொடரும்: உத்தரகண்ட் அரசு

DIN

உத்தரகண்டில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டனில் உருவாகிய புதிய வகை கரோனா வைரஸ் தொற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகிறது. பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

புதியவகை கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டும் கரோனா பரவல் இருக்கலாம் என்று வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

பிரிட்டனிலிருந்து பரவி வரும் புதிய கரோனா வைரஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT