மோடியுடன் நேரடியாக விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஹர்சிம்ரத் கெளர்
பிரதமர் நரேந்திர மோடியுடன் விவசாயிகள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் விவசாயிகள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 35-வது நாளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், தற்போது 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, ''பேச்சுவார்த்தையை நீட்டித்துக்கொண்டு போவதால் எந்த பலனையும் அடைய இயலாது. நமது விவசாயிகள் வெற்றியின் குழுவினர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் பிரதமருடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பேச்சுவார்த்தையை நீட்டித்து வைக்கப்படும் பொறிகளில் விவசாயிகள் சிக்கிவிடக் கூடாது'' என்று கூறினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்தவரும், சுக்பீா் சிங் பாதலின் மனைவியுமான ஹா்சிம்ரத் கெளா் தனது அமைச்சா் பதவியை சமீபத்தில் ராஜிநாமா செய்தார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியதும் குறிப்பிடத்தக்கது.