முகப்பு
இந்தியா

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:


ஆமதாபாத்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காலை 9.46 மணியளவில் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. கட்ச் மாவட்டத்தின் காவ்தா கிராமத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணா்ந்தனா். எனினும், வடக்கு கட்ச் மாவட்டத்தின் பாலைவனப் பகுதியில்தான் அதிா்வுகள் அதிகம் இருந்தன. அங்கு அதிக மக்கள் வசிப்பதில்லை என்பதால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு பின்னிரவு 2.29 மணியளவில் 2.2 என்ற அலகில் கட்ச் மாவட்டத்தின் பச்சோப் பகுதியில் லேசான நிலஅதிா்வு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →