முகப்பு
இந்தியா

ஏலம் விடப்பட்ட கிராமத் தலைவர் பதவி: ரூ.2.05 கோடிக்கு ஏலம் எடுத்தவர் 'தேர்வு'

வாக்களிக்க வரும் வாக்காளர்களை தங்களது வாகனங்களில் வாக்குப்பதிவு மையத்துக்கு அழைத்து வந்து விடும் அரசியல் கட்சிகள், அதில் வருவோரிடம் தங்கள் கட்சிக்கே வாக்களிக்குமாறு வலியுறுத்துவார்கள்.

Updated On : 30 டிசம்பர், 2020 at 12:16 PM
ஏலம் விடப்பட்ட கிராமத் தலைவர் பதவி: ரூ.2.05 கோடிக்கு ஏலம் எடுத்தவர் 'தேர்வு'
பகிர்:


வாக்களிக்க வரும் வாக்காளர்களை தங்களது வாகனங்களில் வாக்குப்பதிவு மையத்துக்கு அழைத்து வந்து விடும் அரசியல் கட்சிகள், அதில் வருவோரிடம் தங்கள் கட்சிக்கே வாக்களிக்குமாறு வலியுறுத்துவார்கள். ஆனால் அந்த நடைமுறையே மிகவும் தவறானது என்று அறிவிக்கப்பட்டு அதற்கு சட்டம் தடை விதித்தது.

ஆனால், தற்போதைய தேர்தல் முறைகேடுகள் அதைவிட மிக மோசமான பழக்கவழக்கங்களால் சீரழிந்து கொண்டிருக்கிறது. பல தேர்தல்களில் புதிய புதிய முறைகேடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

அதில் ஒன்றுதான் இது..

Advertisement

மகாராஷ்டிர மாநிலத்தில் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஒன்று வெளிப்படையாக ஏலம்விடப்பட்டுள்ளது. அந்த ஏலத்தில் ரூ.2.05 கோடிக்கு ஏலம் எடுத்தவர் கிராமத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாசிக் மாவட்டம் தேவ்லால் தாலுகாவுக்கு உள்பட கிராமத்தில் இருக்கும் கோயிலை புனரமைத்து, அதனை பராமரிக்க ரூ.2.05 கோடியை செலவிடுவதாக அறிவித்த விஸ்வாஸ்ராவ் தேவாரே கிராமத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், உம்ரானே என்ற அந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் விஷ்வாஸ்ராவ் பணத்தை முதலீடு செய்துள்ளார் என்றே கூறலாம்.

ஒரு கிராமப் பஞ்சாயத் தலைவர் பதவியை இவ்வளவு விலைக்கு ஏலம் எடுத்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கும். 

ஆனால் இந்த ஏலத்தின் ஆரம்பத் தொகை ரூ.1.11 கோடிதான். கிட்டத்தட்ட இரண்டு மடங்குத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ஜனநாயகத்தின் மிக மோசமான நடைமுறை  என்று விமரிசித்துள்ளார்.

நாம் வாழ்வது ஜனநாயக நாடு. அதில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஏலம் விடக் கூடாது. வெட்டவெளிச்சத்தில் நடத்தப்பட்ட ஜனநாயகப் படுகொலை. இப்படி எல்லாப் பதவிகளும் ஏலம் விடப்பட்டால் யார் வேண்டுமானாலும் எம்எல்ஏ, எம்பி ஆகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம், 14,234  கிராம பஞ்சாயத்துகளுக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், ஜனவரி 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.