ஏழைகளுக்கு ஏமாற்றம்; தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி: ராகுல்
தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடனை தள்ளுபடி செய்து ஏழை மக்களை நரேந்திர மோடி அரசு ஏமாற்றுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடனை தள்ளுபடி செய்து ஏழை மக்களை நரேந்திர மோடி அரசு ஏமாற்றுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், மோடி அரசு இந்த ஆண்டு தொழிலதிபர்களின் ரூ.2,37,876 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.
தள்ளுபடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் கரோனா ஊரடங்கில் தவித்துவரும் 11 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.20,000 வழங்கியிருக்கலாம். மோடி அரசின் வளர்ச்சி இது தான் என்று விமர்சித்துள்ளார்.