மீன் உணவுகள் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு: மத்திய நிதியமைச்சர்
2024 - 25ம் நிதியாண்டில் இந்தியாவின் மீன் உணவுகள் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: 2024 - 25ம் நிதியாண்டில் இந்தியாவின் மீன் உணவுகள் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் 2022 - 23ம் நிதியாண்டில் மீன் உணவுகள் உற்பத்தியை 200 லட்சம் டன்களாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். மீன் உணவு தொடர்பான தொழிலில் இளைஞர்களும் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.