முகப்பு
இந்தியா

மிக நீண்ட பட்ஜெட்: நிர்மலா சீதாராமனின் சாதனையை அவரே முறியடித்தார்

2020 - 21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளிலேயே மிக நீண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:41 PM
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: ஃபோர்ப்ஸ்
பகிர்:


புது தில்லி: 2020 - 21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளிலேயே மிக நீண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு வாசிக்கத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பட்ஜெட் உரையை தொடர்ந்தார். ஆனால், திடீரென அவருக்கு அதிக வியர்வை ஏற்பட்டு, கடைசியாக இரண்டு பக்கங்கள் இருக்கும் போது தொடர்ந்து வாசிக்க முடியாமல், பட்ஜெட் உரையை சுருக்கமாக வாசித்து முடித்தார்.

ஏற்கனவே 2019ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் அதிகபட்சமாக 2 மணி நேரம் 17 நிமிடங்களைக் கொண்டிருந்ததது. இதுதான் நேற்று வரை மிக நீண்ட பட்ஜெட்டாக இருந்தது. ஆனால் 60 வயதாகும் நிர்மலா சீதாராமன், தனது சாதனையை தானே முறியடித்து இன்று இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.