முகப்பு
இந்தியா

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளி

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:43 PM
பகிர்:


புது தில்லி: மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

மக்களவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சியினர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

"குடியுரிமைத் திருத்தச் சட்டம் வேண்டாம்", "நமது ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்", "நமது அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்" என்பது போன்ற கோஷங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.

அப்போது அவைத் தலைவர் ஓம் பிர்லா, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மக்களவையில் தற்போது விவாதிக்கப்பட உள்ளது. எனவே அனைவரும் அவரவர் இருக்கைகளில் சென்று அமருங்கள் என்று கூறினார்.

மேலும், அவையில் இருக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மக்களவையில் கேள்வி நேரம் சுமூகமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். விவாத நேரத்தின் போது அனைத்துப் பிரச்னைகளையும் எழுப்பலாம் என்று கூறினார்.

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே, மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.