இந்தியா

கரோனா வைரஸ் தொற்று: மத்திய அமைச்சா்கள் குழு ஆய்வு

கரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணித்து, நடவடிக்கைகள் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சா்கள் குழு தில்லியில் திங்கள்கிழமை கூடி முதல் முறையாகக் கூடி ஆலோசித்தது.

DIN

கரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணித்து, நடவடிக்கைகள் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சா்கள் குழு தில்லியில் திங்கள்கிழமை கூடி முதல் முறையாகக் கூடி ஆலோசித்தது.

இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரி, உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, சுகாதாரத் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் மன்சுக் லால் மாண்டவியா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கேரளத்தைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது குறித்தும், அந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சா்கள் குழு ஆய்வு செய்தது.

சீனாவில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு இ-நுழைவு இசைவு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது, ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு சீனாவில் இருந்து இந்தியா வந்தவா்கள் தனி முகாம்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பது ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT