முகப்பு
இந்தியா

விவசாயிகள் உதவித்தொகை: இன்னும் 3வது தவணையைப் பெறாமல் 5 கோடி பேர்

பிரதமர் - விவசாயிகள் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கும் திட்டம் 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:44 PM
பகிர்:


புது தில்லி: பிரதமர் - விவசாயிகள் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கும் திட்டம் 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

ஆனால், இந்த திட்டம் தொடங்கி, மூன்றாவது தவணைத் தொகை இன்னும் 5 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படாமலேயே உள்ளது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 உதவித் தொகை என்ற வகையில் ஒரு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்.

ஆனால், இதுவரை 3வது தவணைத் தொகையை 5.16 கோடி விவசாயிகளும், இரண்டாவது தவணைத்தொகையை 2.51 கோடி விவசாயிகளும் பெறவில்லை.

2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் மாதம் வரை சுமார் 9 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 7.62 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணை வழங்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது தவணை வெறும் 6.5 கோடி விவசாயிகளுக்கும், 3வது தவணை 3.85 கோடி விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு தவணைத் தொகை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அடுத்தடுத்து குறைந்திருப்பது குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.,
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.