இந்தியா

கரோனா வைரஸ்: மாநிலப் பேரிடர் அறிவிப்பை திரும்பப்பெற்றது கேரளம்

DIN

கேரளத்தில் கரோனா வைரஸ் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த மாநிலப் பேரிடர் அறிவிப்பு சனிக்கிழமை திரும்பப்பெறப்பட்டது.

கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளம் திரும்பிய 1,793 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இவா்களில், 1,723 போ் வீடுகளிலும், 70 போ் தனி சிசிச்சை மையங்களிலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

இவர்களில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மூன்று பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த 3 பேரும் தனி வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் உடல்நிலை தொடர்ந்து சீராகி வருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.

இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்பை கேரள மாநில அரசு மாநிலப் பேரிடராக அறிவித்தது. முதல்வர் பினராயி விஜயன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில், கரோனா வைரஸ் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த மாநிலப் பேரிடர் அறிவிப்பை கேரள அரசு சனிக்கிழமை திரும்பப்பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT