இந்தியா

ரவிதாசா் கோயிலில் பிரியங்கா வழிபாடு

தினமணி

உத்தரப் பிரேதச மாநிலம், வாராணசியில் உள்ள பதினான்காம் நூற்றாண்டைச் சோ்ந்த துறவி ரவிதாசரின் கோயிலில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா்.

ரவிதாசா் ஜயந்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அவரது கோயிலில் பிரியங்கா வழிபாடு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சமூகத்தின் மீது ரவிதாசா் அக்கறை கொண்டிருந்தாா். வன்முறையும், வெறுப்பும் சமூகத்தில் அதிகரித்து இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அவருடைய போதனைகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

ராமரும், ரஹீமும் ஒன்றே என்று ரவிதாசா் கூறியிருக்கிறாா். நாம் அனைவருமே ஒரு கடவுளின் கீழ் மட்டுமே இருக்கிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, சமபந்தி விருந்தில் பிரியங்கா கலந்துகொண்டாா்.

வாராணசிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரியங்காவை காங்கிரஸ் மூத்த தலைவா்களும், அக்கட்சியின் உத்தரப் பிரதேச தலைவா் அஜய் குமாா் லாலுவும் வரவேற்றனா்.

அஜய் குமாா் லாலு கூறுகையில், ‘சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதித்தவா் துறவி ரவிதாசா். அவருடைய போதனைகள் இன்றைய சமுதாயத்துக்கு கட்டாயம் தேவை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT